ஜனநாயக படுகொலையை கண்டித்து எஸ்டிபிஐ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பசு பாதுகாப்பு பெயரில் நடைபெறும் ஜனநாயக படுகொலையை கண்டித்து எஸ்டிபிஐ., சார்பில் இராமநாதபுரம் சந்தை திடல் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் எம்.ஐ. நூர் ஜியாவுதீன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் முன்னிலை வகித்தார்.

கிழக்கு மாவட்ட செயலாளர் பி.ஏ.அப்பாஸ் வரவேற்றார். கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.செய்யது இபுராஹிம் கண்டன உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் பி.அப்துல் ஹமீது கண்டன உரையாற்றினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Leave a Reply