கோவையில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி

கோவையில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் 500 க்கும் மேற்பட்ட வீரர், விராங்கனைகள். கலந்து கொண்டனர்.கோவையில் மாவட்ட டேக்வாண்டோ சங்கம் மற்றும் இந்துஸ்தான் கல்லூரியின் உடற்கல்வி துறை இணைந்து மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது.

 

அவினாசி சாலையில் உள்ள நவஇந்தியா பகுதியில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போட்டியை கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிசந்தர் மற்றும் பள்ளி விளையாட்டு அதிகாரி ராஜராஜேஸ்வரி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 70 க்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.11 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான நடைபெற்ற போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும்,இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என போட்டியின் கோவை மாவட்ட டேக்வாண்டோ சங்கத்தின் செயலாளர் சிஜுகுமார் தெரிவித்தார்.


Leave a Reply