சர்வதேச அளவிலான குளோபல் கிட்ஸ் பேஷன் ஷோவிற்கான தேர்வு

சர்வதேச அளவிலான குளோபல் கிட்ஸ் பேஷன் ஷோவிற்கான தேர்வு வரும் 27 ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.சர்வதேச அளவிலான குளோபல் கிட்ஸ் பேஷன் ஷோ செப்டம்பர் 22 ந்தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற உள்ளது. 5 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக நடைபெறும் இதற்கான தேர்வு கோவையில் உள்ள prozone mall இல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.இதில் பேசிய நிகழ்ச்சியின் கோவை மண்டல தூதுவர் ஜெயா மகேஷ் முதன்முறையாக சர்வதேச அளவிலான இந்த ஃபேஷன் ஷோ முதன் முறையாக இங்கு நடைபெற உள்ளதாகவும்,இதில் குறிப்பாக அரசுப் பள்ளிகளைச்சேர்ந்த மாணவ,மாணவிகளும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர்களுக்கான செலவை நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களை ஏற்றுக் கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்த சந்திப்பின்போது பாலாஜி கிருஷ்ணன், மீனு உட்பட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பலர் உடன் இருந்தனர்.


Leave a Reply