தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டொமோ தெரபி சிகிச்சை முறை..!

மிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்கு கிளியர் ஆர்டி வசதியுடன் கூடிய டொமோ தெரபி சிகிச்சை முறை  தொடங்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் முதல்முறையாக புற்று நோய்க்கு கிளியர் ஆர் டி மற்றும் சின்கரனி வசதியுடன் கூடிய டொமோ தெரபி கதிர்வீச்சு சிகிச்சை மையம் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

 

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மருத்துவமனையின் தலைவர் குருசங்கர் மற்றும் காமினி குருசங்கர் சிகிச்சை மையத்தினை திறந்து வைத்தனர். தொடர்ந்து பேசிய மருத்துவமனை தலைவர் குரு சங்கர் டொமோ தெரபி என்பது புற்று நோய்க்கான ஒரு சிகிச்சை முறையாகும், நோயாளி சிகிச்சை மேஜையில் படுத்திருக்கும் நிலையில் விடுபட்ட பல திசைகளில் இருந்து புற்றுகட்டியை இலக்காகக் கொண்டு கதிர்வீச்சு சிகிச்சை இதன் மூலம் செய்யப்படுகிறது.

 

இதன் முக்கிய அம்சம் புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை திறன்களை கணிசமான அளவு வலுவாகி இருக்கிறது ஒரு புரட்சிகரமான புதிய பாதையை அளிக்கும் முன்மாதிரியான நிகழ்வுகளை ஒன்றாக திகழ்கிறது.இந்தக் கதிர்வீச்சு சிகிச்சையின் மூலம் புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடியும்.இந்த சிகிச்சையில் பக்க விளைவுகள் மிக மிகக் குறைவு.

 

இந்தியாவில் தமிழ்நாட்டில் முதல் முறையாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தொடங்கப்பட்டிருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது என்றார். இந்நிகழ்வில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.


தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக காவல் நிலையங்களில் கிரேட் திட்டம் தொடக்கம்..!

மிழ்நாட்டிலேயே முதன் முறையாக காவல் நிலையங்களை கண்காணிக்க பொது மக்களுக்கு உதவ கிரேட் என்ற திட்டத்தை மதுரை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு தாமதமின்றி சேவை அளிக்கவும் பொதுமக்கள் நல்ல முறையில் நடந்து கொள்வதை உறுதி செய்யவும் இந்த திட்டத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திறந்துவைத்தார்.

 

காவல் நிலையத்துக்கு வருபவர்களின் அனைத்து விபரங்களும் கிரேட் என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவிடப்படும். மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 


தமிழகத்தில் முதன்முறையாக பயோ கேஸில் இயங்கும் பேருந்து..!

மிழகத்தில் முதன்முறையாக பயோ கேஸில் இயங்கும் பயணிக்கும் பேருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இயக்கப்பட்டு வருகிறது. கம்ப்ரஸர் நேச்சுரல் கேஸ் எனப்படும் இயற்கை எரிவாயுவை கொண்டு இயக்கப்படும் இந்த தனியார் பேருந்து சோதனை ஓட்டமாக ராசிபுரத்தில் இருந்து சேலத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.

 

பேருந்தில் டீசல் டேங்க் 500 கிலோ கொள்ளளவு கொண்ட சிலிண்டர்கள் ஒரு பக்கத்திற்கு நான்கு வீதம் பொருத்தப்பட்டுள்ளது. 56 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பயோ கேசுக்கு 6 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைப்பதாகவும், சி‌என்‌ஜி கிட்டை பொருத்த சுமார் ஐந்து லட்ச ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் முதன் முறையாக பெட்ரோல் பங்கில் முற்றிலும் கணிணி மயமான வாடிக்கையாளர் தகவல் மையம்

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கோவையில் பெட்ரோல் விலை மற்றும் அது குறித்த அனைத்து தகவல்கள் குறித்த டிஜிட்டல் தொழில்நுட்ப திரை மையம் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் மற்றும் லக்கி ஸ்டார் இணைந்து இனிய சனிக்கிழமை முகாம்” எனும் தலைப்பில் புருக்பீல்ட்ஸ் எதிரில் உள்ள லக்கி ஸ்டார் பெட்ரோல் பங்கில் நடைபெற்றது.

 

இதில் தமிழகத்தில் முதன் முறையாக ” முற்றிலும் கணிணி மயமான வாடிக்கையாளர் தகவல் மையம் துவங்கப்பட்டது.இந்த மையத்தை இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் கோவை மண்டல தலைமை பிரிவு விற்பனை மேலாளார் லேகா ராஜ் மீனா துவக்கி வைத்தார். இந்த மையத்தில் தற்போதைய பெட்ரோல் விலை நிலவரம்,பெட்ரோலின் வெப்பநிலை மற்றும் அது குறித்த கூடுதல் தகவல்கள் என அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இது குறித்து லக்கி ஸ்டார் நிறுவனத்தின் பங்குதாரர் சேதுராமன் பேசுகையில் பிளாஸ்டிக் பயன்பாடை குறைக்கும் வகையில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் இந்த மையத்தை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தார்.இது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் இருக்கும் என தெரிவித்தார்.

இவ்விழாவினை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு இலவச இரத்த அழுத்த சோதனை செய்யப்பட்டு இலவச பிளிட்கார்ட் வழங்குதல் மற்றும் இலவசஆயில் மாற்றும் முகாம் ஆகியவை நடைபெற்றது.விழாவில் இந்தியன் ஆயில் நிறுவன அலுவலர்கள் ஜெயக்குமார் ,பிரசாந்த் மற்றும் பிலிட் கார்ட் ஸ்ரீநாத் ,லக்கி ஸ்டார் பங்குதாரர்கள் மற்றும் இந்தியின் ஆயில் டீலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.