விஷம் குடித்த காதலனை காப்பாற்ற முடியாமல் கதறி அழுத காதலி

Publish by: --- Photo :


விஷம் குடித்த காதலனை காப்பாற்றுவதற்காக இளம் பெண் அழைத்துச்சென்று மருத்துவமனையில் சேர்த்தார். வரும் வழியிலேயே அவர் இறந்ததை அறிந்த அந்த பெண் கதறி துடித்தது பரிதாபமாக சம்பவம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

 

திருப்பூரை அடுத்த பல்லடம், பட்டேல் ரோட்டை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் விக்னேஷ், வேன் டிரைவர். இவரும், பல்லடம் அருகே உள்ள கே.அய்யம்பாளையத்தை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்தனர். அந்த சிறுமி பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது காதல் விவகாரம் விக்னேஷின் பெற்றோருக்கு வந்துள்ளது. இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த பெண் வீட்டில் அவருடைய காதலுக்கு ஓகே சொல்லிவிட்டனர்.ஆனாலும் தனது மகளுக்கு 17 வயதே ஆவதால் உடனே திருமணம் செய்து வைக்க முடியாததால். 18 வயது நிறைவடைந்ததும் திருமணம் செய்து வைக்க உள்ளதாக விக்னேசிடம் கூறியுள்ளனர்.

 

காதலி வீட்டில் ஓகே சொன்னதால் விக்னேஷ், தனது வீட்டை விட்டு வெளியேறி, தன்னை காதலி வீட்டுக்கே சென்று அங்கேயே தங்கியிருந்தார். இதனால் வீட்டுக்கு தனது மகன் சரியாக வராததால் சந்தேகம் அடைந்த கிருஷ்ண வேணி அக்கம், பக்கத்தில் விசாரித்த போது காதலி வீட்டில் தங்கியிருக்கும் விவரம் கேட்டு அதிர்ச்சி அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். பின் கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஷின் தாய் கிருஷ்ணவேணி, சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு சென்று சத்தம் போட்டுள்ளார்.

 

இதை அறிந்த விக்னேஷ், தன்னால் தனது காதலியின் வீட்டார் அவமானம் அடைந்து விட்டார்களே என்ற சோகத்தில் அங்கிருந்து புறப்பட்டு காரணம்பேட்டையில் அருகே ஒரு ரூம் எடுத்து தங்கி இருந்தார். தினமும் காதலியின் அருகிலேயே இருந்து அவருடன் கொஞ்சி பேசி மகிழ்ந்த அந்த சந்தர்ப்பம் அம்மாவால் இப்படி ஆகிவிட்டதே, என்று விக்னேஷ் விரக்தி அடைந்தார். காதலியோடு சம்பவங்களை நினைத்து நொந்துப்போன அவர் நேற்று காலை விக்னேஷ் காரணம்பேட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பல்லடம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

 

அப்போது லட்சுமி மில் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகே வந்ததும் ரோட்டோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கீழே இறங்கிய விக்னேஷ், காதலியை சந்திக்க முடியாத வேதனையில் வெறுப்படைந்த விக்னேஷ், காதலியை சந்திக்க முடியாமல் நாளுக்கு நாள் நொந்து சாவதை விட ஒரே அடியாக விஷம் குடித்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்து . ஏற்கனவே வாங்கி வந்த விஷ பாட்டிலை திறந்து விஷத்தை குடித்தார். பின்னர் தான் விஷம் குடித்த விவரத்தை தனது காதலிக்கு சொல்வதற்காக தனது செல்போனை தேடினார். ஆனால், அவசரத்தில் கிளம்பிய அவர் தனது போனை எடுக்காமல் வந்தததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவரிடம் போனை வாங்கி தனது காதலியை தொடர்பு கொண்டு தான் விஷம் குடித்த மேட்டரை சொல்லி அழுதார்.

 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மதுமிதா, இப்போது நீங்கள் எங்கு இருக்கிங்க? என்று கேட்டாள். அதற்கு லட்சுமி மில் அருகே நான் ரோட்டோரம் என விக்னேஷ் சொல்ல, தனது காதலன் விஷம் குடித்த செய்தியை அறிந்த மதுமிதா, அலறியடித்துக்கொண்டு தனது பைக்கை எடுத்துக்கொண்டு காதலன் இருக்கும் இடம் நோக்கி மின்னல் வேகத்தில் விரைந்த அங்கு ரோட்டோரம் அமர்ந்து இருந்த தனது காதலனை கட்டிப்பிடித்து கதறி அழுத்த அந்த பெண் பின்னர் உடனடியாக, தனது மொபட்டில் அவரை ஏற்றிக்கொண்டு வேகமா ஒட்டிக்கொண்டு சென்றுள்ளார். தன்னை இறுகப்பிடித்துக்கொள்ளுமாறு கூறியதுடன் விக்னேஷ் மயங்கி விடாமல் இருக்க அவரிடம் பேச்சுக்கொடுத்தபடி அந்த பெண் ஸ்கூட்டரை ஓட்டினாள். தனது காதலனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்லடம் வந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தாள்.

 

டாக்டர்கள் விக்னேசுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள். அதன்பிறகும் மொபட்டில் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து சென்றுள்ளார் மதுமிதா. அதற்குள் விக்னேஷ் மயங்கினார். பின்னர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே வரும் வழியில் விக்னேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டதும் தனது காதலனின் உடலை கட்டிப்பிடித்து சிறுமி கதறி துடித்தது பார்ப்பவர்களையும் கலங்கவைத்துள்ளது.இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Leave a Reply