குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட எல்லைப் பகுதிகளில் 21 காவல் சோதனைச் சாவடிகள்

திருப்பூர் மாவட்ட எஸ்.பி கயல்விழி உத்தரவின்பேரில் திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோதமான கடத்துதலைத் தடுக்கவும், வாகன விபத்துக்களை குறைக்கும் பொருட்டும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்யும் வகையிலும், மாவட்ட எல்லைப் பகுதிகளில் 21 காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சோதனைச் சாவடிகளிலும் ஒரு சட்டம் ஒழுங்கு தலைமைக் காவலர் மற்றும் மூன்று ஆயுதப்படை காவலர்கள் பணியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள 21 காவல் சோதனைச் சாவடிகளும் நேற்று முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் சோதனைச் சாவடிகளில் தொடர்ந்து வாகன தணிக்கை மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் தணிக்கை செய்தல் போன்ற பணிகள் நடைபெறுவதால் மாவட்டத்தில் குற்றச் செயல்கள் நடைபெறுவது குறையும்.

 

மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எளிதில் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள். மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பயமின்றி நடமாடும் வகையில் உள்ளதாக மக்கள் பாராட்டியுள்ளார்கள்.


Leave a Reply