கோவையில் முதன் முறையாக முதியோர்களுக்கான மருத்துவ நலத்துறை !!!

கோவையில் முதன் முறையாக முதியோர்களுக்கான மருத்துவ நலத்துறை மையத்தை சொல்லின் செல்வர் சுகிசிவம் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.வெளிநாடுகளில் முதியோர்களுக்கான பாதுகாப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு அதை நடைமுறையில் கொண்டு வருவது அதிகமாகி கொண்டே இருக்கின்றது.

இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முதியோர்களுக்கு மருத்துவம் குறித்த பிரச்னையானது அதிகமாக காணப்படுகிறது. இப்பிரச்சனையை கருத்தில் கொண்டு முதியோருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில்
கோவை அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள பி எஸ் ஜி மருத்துவமனையில் முதன் முறையாக முதியோர் நலத்துறைக்கு என்று தனியாக மருத்துவம் மையம் துவங்கப்பட்டுள்ளது.

இதற்கான துவக்க விழா பி.எஸ்.ஜி.குழுமங்களின் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மையத்தை சொல்லின் செல்வர் சுகிசிவம் திறந்து வைத்தார்.இதன் மூலம் முதியோருக்கு மருத்துவ ஆலோசனை,முதியோர் பாதுகாப்பு,சிறந்த மருத்துவம்,போன்ற வசதிகள் மேற்கொள்ள உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த நிகச்சியில் முதியோர் நலத்துறை பவுண்டேசன் நடராஜ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply