அமலாபாலின் ஆடை திரைப்படத்தின் ரிலீசில் சிக்கல்

அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ள ஆடை திரைப்படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேயாதமான் படத்தை இயக்கிய ரத்னகுமார் அடுத்து இயக்கியுள்ள படம் ஆடை. அமலா பால் இதில் ஆடையில்லாமல், நிர்வாணமாக நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

ஆடை திரைப்படம் இன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை பத்திரிகையாளர்களுக்காக 10 மணிக்கு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த காட்சி 9.30 மணி அளவில் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

 

இதுகுறித்து விசாரித்த போது, இன்று காலை வரை படம் மீதான பொருளாதார பிரச்சினைள் நீடித்ததால் படத்தின் ரிலீஸ் தள்ளிபோகும் என தெரியவந்துள்ளது.தியேட்டரிலும் படம் ரிலீசாகுமா? இல்லையா? எனும் குழப்பம் நீடிக்கிறது. தியேட்டர்களில் ஆடை படம் தொடர்பாக எந்த ஒரு பேனரோ, போஸ்டர்களோ இடம் பெறவில்லை.

ஆடை படம் இன்று திட்டமிட்டப்படி ரிலீசாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நடிகை அமலா பால் இந்த படத்துக்காக நிறைய கஷ்டப்பட்டுள்ளார். சமீபத்தில் கூட பட விளம்பரத்துக்காக எல்லா ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வந்தார். ஆனால் அவரது கஷ்டங்கள் எல்லாம் வீணாகபோய்விட்டது.

 

இப்படத்தில் அவர் நிர்வாணமாக நடித்திருப்பதால், பர்ஸ்ட் லுக் போஸ்டர் முதலே இப்படம் சர்ச்சையில் சிக்கி வந்தது. சமீபத்தில் வெளியான டிரெய்லரும் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. இதனாலேயே படம் மீதான எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் இன்று பட ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளது.


Leave a Reply