குஜராத் மாநிலத்தில் திருமணமாகாத உங்கள் செல்போன் பயன்படுத்தினால் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் வழக்கமானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.நீரின்றி வாழ இயலாத காலம் மாறி தற்போது செல்போன் இன்றி வாழ இயலாத சூழல் உருவாகியுள்ளது.
நம் தினசரி வாழ்வியலில் செல்போன் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளது. தொழில்நுட்பம் முன்னேறியுள்ள இந்த காலகட்டத்திலும் நம் நாட்டின் கிராமப்புறங்களில் தேவையற்ற சட்டங்களினால் பெண்களை அடிமையாக்குப்படுவது மிகுந்த வருத்தமளிக்கிறது.
குஜராத் மாநிலத்தில் நிலவிவரும் சமுதாயங்களில் தகூர் சமூகத்தினர் பெரும்பான்மையினராவர். இந்திய சமூகத்தை சேர்ந்த பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.அவற்றுள் மிகவும் கடுமையான சட்டம என்னவென்றால், திருமணமாகாத பெண்கள் நிச்சயமாக செல்போன் பயன்படுத்தக்கூடாது, மேலும் தாங்கள் சேர்ந்த சமூகத்தை அல்லாமல் வேறு சமூகத்தினருடன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பனவாகும்.
குஜராத்தின் வடக்கில் அமைந்துள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் நிறைய கிராமங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் 10-க்கும் மேற்பட்ட முதலில் இந்த விதிமுறைகள் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த தகவல் ஆணையம் அனைத்து கிராமங்களும் ஒன்று கூடிய பொதுக்கூட்டத்தில் கிராம தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காலம் எவ்வளவோ முன்னேறி சென்று கொண்டிருக்கும்போது, இப்படிப்பட்ட கீழ்த்தரமான விதிகளை நிர்ணயிப்பது பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும் என்பதனை அனைவரும் உணர வேண்டும்.