இராமநாதபுரம் அருகே புதுமடத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து எஸ் டி பி ஐ உண்ணாவிரதப் போராட்டம்

Publish by: மகேந்திரன் --- Photo :


இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் மின்வெட்டை கண்டித்து எஸ் டி பி ஐ சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சோமு, மாவட்ட பொருளாளர் முகமது ரபீக் முன்னிலை வகித்தனர்.

 

மாவட்ட செயலாளர் பைரோஸ் கான் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அமைப்பு செயலாளர் முகமது யாசின், இந்திய கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகராஜன், நாம் தமிழர் கட்சி தொகுதி இளைஞர் பாசறை செயலர் ராஜூ, தமிழர் நலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஜெரோன் குமார், ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சிவக்குமார், தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் தமிழ் முருகன், தேவேந்திரர் குல இளைஞர் பேரவை மாவட்ட பொதுச் செயலாளர் அழகர்சாமி பாண்டியன், எஸ்டிபிஐ., மாவட்ட செயலாளர்கள் அஸ்கர் அலி, ஹமீது இப்ராஹீம், துணைத் தலைவர் சுலைமான், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பஷீர் அலி, பைசல் அகமது ஆகியோர் வாழ்த்துரை பேசினர்.

மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது இப்ராஹிம், முன்னாள் மாவட்ட செயலாளர் அஜ்மல் ஷரீப் ஆகியோர் கண்டன உரையாற்றினர். எஸ்டிபிஐ., கட்சி மேற்கு மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் நிறைவுரை பேசி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். புதுமடம் கிளை தலைவர் முகமது பஷீர் நன்றி கூறினார்.

 

புதுமடம் பகுதிக்கு நிரந்தர லைன் மேன் நியமிக்க வேண்டும், அடிக்கடி மின்வெட்டுக்கான காரணத்தை மின் நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும். மின் தடையை நீக்குவதற்கான கால அவகாசம் தொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் உறுதியளிக்க வேண்டும். இறால் பண்ணைகளுக்கு கூடுதல் நேர மின் விநியோகத்தை குறைத்து வீட்டு மின் இணைப்புகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.

தாமரைக்குளம் மின் பாதை வழியாக புதுமடம் பகுதிக்கு மின்சாரம் விநியோகிக்க வேண்டும், புதுமடத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரை முறையாக பராமரிக்க வேண்டும், 50 ஆண்டுகளுக்கு முன் அமைத்த மின் கம்பி, மின்வயர்களை மாற்ற வேண்டும் உள்பட 11 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

 

ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ், உச்சிப்புளி உதவி மின் பொறியாளர் கதிரவன், வருவாய் ஆய்வாளர் உதயக்குமார், புதுமடம் கிராம நிர்வாக அலுவலர் அன்ஸர் ராஜா ஆகியோர் முன்னிலையில் சமரச பேச்சு வார்த்தை நடந்தது. புதுமடத்தில் ஏற்படும் மின் வெட்டை இன்னும் இரண்டு மாதத்தில் சீரமைத்து தரப்படுவதுடன், இதர கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.


Leave a Reply