கர்ப்பிணி ஒருவர் பலி! உறவினர்கள் மருத்துவமனை முன்பு அமர்ந்து தர்ணா

போதிய மருத்துவ வசதி இல்லாததால் நிறைமாத கர்ப்பிணியொருவர் செந்துறையில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் இறந்து போன சம்பவமானது திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் செந்துறை என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு குடகிபட்டி மணபுளிகாடு என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. 3 வருடங்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜோதிகா என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

 

ஜோதிகாவின் வயது 23. இத்தம்பதியினருக்கு மோனிஷா என்ற 2 வயது குழந்தையுள்ளது குறிப்பிடத்தக்கது.
2-வது முறையாக சென்ற ஆண்டு ஜோதிகா கருத்தரித்தார்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மோனிஷாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் அவரை செந்துறையில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

 

வலி மிகவும் அதிகமானதால் ஜோதிகாவுக்கு பிரசவம் பார்க்க மருத்துவர்கள் முடிவெடுத்தனர். சிகிச்சை தொடங்கியபோது ஜோதிகாவின் உடல்நிலை சற்று மோசமானது. மேலும் அங்கு சிகிச்சையை தொடர இயலாததால், அவரை திண்டுக்கல் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதிர்பாராவிதமாக ஜோதிகா செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

 

இதனை அறிந்த ஜோதிகாவின் கணவர் மற்றும் உறவினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜோதிகாவின் உறவினர்கள் கூறுகையில், செந்துறைஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவ வசதி எதுவும் இல்லை. பெண் டாக்டர்கள் பணி அமர்த்தப்படாததால் ஆண் டாக்டர்களை பிரசவம் பார்க்க தொடங்கினர். அவர்களின் கவனச்சிதறினால் ஜோதிகா தற்போது உயிரிழந்துள்ளார்.

 

வீட்டில் இருந்த ஆம்புலன்ஸ் கூறியபோது திண்டுக்கல் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினோம். ஆனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பொறுப்பில்லாமல் எங்களை செந்துறைக்கு அழைத்து சென்றார். ஜோதிகாவின் மறைவுக்கு காரணமாக இருந்த அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.பின்னர் திண்டுக்கல் அரசு பொது மருத்துவமனையில் வாயிலின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தாசில்தார், வருவாய் ஆய்வாளர், காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் விரைந்து வந்து சமரச முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஜோதிகாவின் உறவினர்களிடம் அவை எடுபடவில்லை. சாலை மறியலினால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சம்பவமானது செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply