அத்திவரதரை காண சென்று கூட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின்

அத்திவரதரை காண காஞ்சிபுரம் சென்று, அங்கு கூட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழந்தது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் பேரவையில் இன்று பேசினார். பல லட்சம் பக்தர்கள் திரளும் பகுதியில் முறையான பாதுகாப்பு இல்லை.

மற்ற மாநிலத்தவரும் காஞ்சிபுரம் வருவதால் போதுமான ஏற்பாடுகள் செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தினார். பக்தர்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குறித்த முழுவிவரம் தெரிந்தவுடன் பதில் தருவதாக முதல்வர் பழனிசாமி அவையில் தெரிவித்தார்.


Leave a Reply