சில நாட்களாக நிலவும் தொடர் மின் வெட்டை சீரமைக்காத தமிழக மின் வாரியத்தை கண்டித்து திமுக., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் கடந்த சில நாட்களாக நிலவும் தொடர் மின் வெட்டை சீரமைக்காத தமிழக மின் வாரியத்தை கண்டித்து திமுக., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி பகுதியில் சில நாட்களாக மின்சாரம் துண்டிப்பு காரணமாக மக்கள் அல்லல் பட்டு வந்த நிலையில், அதனை கண்டித்து தி மு க சார்பாக நகர் செயலர் டி.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.சம்பத் ராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட மீனவரணி துணை செயலாளர்கள் என்.பூவேந்திரன், வி. காந்தகுமார், முன்னாள் கவுன்சிலர்கள் ஆர்.ராஜகோபால்,இ.முபாரக், மீனாட்சி, சீனி செய்யது அம்மாள், மாவட்ட பிரதிநிதிகள் பி. ராமமூர்த்தி, எஸ்.சாதிக் பாட்ஷா, ஒய்.அயூப்கான், ஒன்றிய பிரதிநிதிகள் எம்.ஆதம் முகமது சி.தில்லை குமார், தகவல் தொழில் நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் டி.வெள்ளைச்சாமி, மாணவரணி அமைப்பாளர் டி.கிருஷ்ணன், நகர் இளைஞரணி செயலாளர் பி.கீதானந்த், துணை அமைப்பாளர் அரவிந்த், வார்டு செயலாளர்கள் ஆர்.சக்திவேல், கஜினி முகமது, விவசாய அணி துணை அமைப்பாளர் எஸ்.எம்.ரகுமான் கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஒன்றிய பிரதிநி செல்ல மரைக்காயர் நன்றி கூறினார்.


Leave a Reply