இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிறு கிழமை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடியது.இதில் முதலாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே சொதப்பி வந்ததன.
பின்னர் இங்கிலாந்து அணியும் 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் மட்டுமே எடுத்தனர் இதனால் இந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவர் விளையாடும் நிலை வந்துள்ளது.பின்னர் சூப்பர் ஓவர் முறையில் அதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது.16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. இதன் மூலம் சூப்பர் ஓவரில் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரி விரட்டி பென் ஸ்டோக்ஸ் இரண்டு ரன்கள் ஓட முயற்சித்தார். நியூசிலாந்து வீரர் கப்தில் ரன் அவுட் செய்யும் நோக்கத்துடன் பந்தை விக்கெட் கீப்பரை நோக்கி வீசினார்.
பந்து எதிர்பாராத விதமாக ஸ்டம்பில் படாமல் பேட்டியில் ஊராட்சி பவுண்டரிக்கு சென்றது. இதற்கு நடுவர் 6 ரன்கள் கொடுத்தது போட்டியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடுவரின் இந்த முடிவு பலரால் விமர்சிக்கப்பட்டும் எதிர்ப்பு பட்டு வருகிறது.
இந்த சர்ச்சைக்கு இதுவரை மௌனம் காத்துவந்த ஐசிசி தரப்பிலிருந்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐசிசி செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில் எந்த ஒரு முடிவையும் களத்தில் உள்ள நடுவார்களே ஐசிசி விதியின்படி முடிவெடுப்பார்கள். நடுவர்களின் முடிவில் எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்க முடியாது என்று கூறினர்.
இதை தொடர்ந்து ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுக்கப்பட்டது நடுவர்களின் தெளிவான குழப்பம் என சர்வதேச முன்னாள் நடுவர் சைமன் டஃபெல் கூறியுள்ளார். ஐசிசி விதிப்படி 5 ரன்கள் தான் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.