2023 ஆம் உலக கோப்பை கிரிக்கெட் எங்க நடக்க போகுது? நம்ம ஏரியால

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. அந்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் மார்ச் 23 -ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெறவுள்ளது. உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் 1987, 1996, 2011
ஆகிய மூன்று ஆண்டுகளிலும் நடைபெற்றுள்ளது. இதில் 1987 இல் நடந்த உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தானும்,இந்தியாவும் இணைந்து நடத்தியது. 1996 மற்றும் 2011 -இல் ஆசிய அணிகள் சேர்ந்து போட்டியை நடத்தின.

 

இந்த நிலையில், 2023 -ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை இந்தியா மட்டும் தனித்தே நடத்தவுள்ளது. 2019 உலகக்கோப்பை தொடர் நேற்று முடிவடைந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாற்று படைத்தது. இந்த நிலையில் 2023 உலககோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.


Leave a Reply