உல்லாசத்திற்காக 4 வயது சிறுவன் அடித்து கொலை செய்யபட்ட சம்பவத்தில் தாய் உட்பட நால்வர் கைது

4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு நான்கு வயதில் ஹரிஷ் என்ற மகன் உள்ளார் . கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு முருகனும் கீதாவும் பிரிந்து வேறுவேறு நபர்களைக் திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் வசித்து வந்தனர்.

இதனிடையே கீதாவின் தங்கை புவனேஸ்வரியும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவர் கார்த்திக் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். ஆனால், கார்த்திக் அடிக்கடி கீதா வீட்டிற்கு வந்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதேபோல புவனேஸ்வரியும், உதயகுமாரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

இதனை ஹரிஷ் பார்த்து விட்டான். இவர்கள் அனைவரின் உல்லாசத்துக்கும் ஹரீஷ் இடைஞ்சலாக இருப்பதாக எண்ணினார்கள். ராத்திரி நேரம் என்றும் பார்க்காமல், ஹரீஷை வெளியில் அனுப்பி கதவை அடைத்து விடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தனராம்.ஹரீஷ் தங்களுக்கு மிகவும் இடைஞ்சலாக இருக்கிறான் என்று உதயகுமாரும் கீதாவும் தெரிவித்தனர்.

அந்த சமயத்தில்தான் இதனையடுத்து ஹரீஷை கொலை செய்து செய்வது என்று 4 பேரும் முடிவு செய்தனர்.பிறகு கோம்பை கால்நடை ஆஸ்பத்திரிக்கு எதிராக உள்ள மயானத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பகுதிக்கு சென்றவுடன் கார்த்திக்குமார் கம்பியால் ஹரீஷின் கழுத்தில் குத்தியதாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.


Leave a Reply