தொண்டியில் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது

Publish by: --- Photo :


இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தொண்டி – புதுக்குடி பகுதியில் ஆழ்கடலில் வெடி வைத்து மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருப்பதாக தொண்டி மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தொண்டி மரைன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் தொண்டி புதுக்குடியைச் சேர்ந்த சேதுராமன் மகன் வீரபத்திரன் (44) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஆழ்கடலில் வெடிவைத்து மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய தடை செய்யப்பட்ட வெடிமருந்துகளான ஜெலட்டின் குச்சிகள் 65, டெட்டனேட்டர்கள் 44, 5 மீட்டர் வயர் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply