இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தி மு க சார்பாக காமராஜர் பிறந்த நாள் விழா

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 117 வது பிறந்தநாள் விழாவான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு கமுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார். முன்னதாக முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், கமுதி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வாசுதேவன், கமுதி பாலமுருகன், கமுதி நாடார் உறவின்முறையை சேர்ந்த பெரியோர்கள் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கமுதியில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டு காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


Leave a Reply