” ரிப்போர்ட்டர்னா பெரிய புடுங்கியா ” பெண் ஆய்வாளரின் ஆணவப்பேச்சு வீடியோ !!

” ரிப்போர்ட்டர்னா பெரிய புடுங்கியா அவங்களை பிடித்து பிடித்து சிறையில் போடு ” ருத்ரதாண்டவம் ஆடிய பெண் ஆய்வாளர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதற்கு பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலையத்தில் காலை செய்தி சேகரிக்கச் சென்ற தினகரன் மற்றும் தினமலர் நாளிதழ் செய்தியாளர்களை எனது அனுமதி இல்லாமல் காவல் நிலைய வளாகத்தில் எப்படி நீங்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கலாம் என கூறி தகாத வார்த்தைகளால் திட்டி இரண்டு செய்தியாளர்களையும் தனது கீழ் பணிபுரியும் காவலர்களை கொண்டு குற்றவாளிகளை அழைத்துச்செல்வது போல தரதரவென இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் கீழே அமருமாறு கூறி தனது அதிகார பலத்தை காட்டியுள்ளார் வேப்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி.

இந்த தகவல் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.இத்தகவல் பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.காலையில் இருந்து மாலை வரையில் இரண்டு செய்தியாளர்களையும் காவல் நிலையத்தில் நிற்க வைத்துள்ள சம்பவம் மற்றும் இருவரையும் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி அடித்து, தள்ளி காவல் நிலையத்திற்க்கு இழுத்து சென்று மனித உரிமையை மீறிய செயல் என்றும்,இதனை கண்டித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

சமீப காலமாக பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கை துறையின் குரல்வளையை நெறிப்பதாகும்.பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை தமிழக அரசு தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒரு காவல் துறை அதிகாரியே செய்தியாளர்களிடம் இவ்வளவு அநாகரீகமாக நடந்து கொண்டது வேதனைக்குரியது மட்டுமல்ல.. வெட்கக்கேடானது.


Leave a Reply