முதல்வர் இபிஎஸ்.மற்றும் ஓ பி எஸ் முன்னிலையில் அதிமுக., வில் மீண்டும் ஐக்கியமான அமமுக., மகளிரணி மாநில இணை செயலர்,இராமநாதபுரம் மாவட்ட அதிமுக., மகளிரணி மாவட்ட செயலராக இருந்தவர் கவிதா சசிகுமார். 2011 ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இராமநாதபுரம் நகராட்சி தேர்தலில் வென்ற இவர், துணை சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார். நகராட்சி தலைவராக இருந்த எஸ்.கே.ஜி., சேகர் மறைவுக்கு பின்னர், நகராட்சி தலைவராக பொறுப்பு வகித்தார்.
இதன் பின், தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தினகரன் அணியில் அங்கம் வகித்த கவிதா சசிகுமாருக்கு அமமுக., மகளிரணி மாநில இணை செயலர் பதவி வழங்கப்பட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அதிமுக., வில் மீண்டும் இணைத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மணிகண்டன் ஆலோசனைப்படி, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி முன்னிலையில் கவிதா சசிகுமார் தன்னை அதிமுக., வில் மீண்டும் இணைத்துக் கொண்டார்.
அமைச்சர் மணிகண்டன், கவிதாவின் கணவரும் அமைச்சரின் அண்ணனுமான சசிகுமார், கடலாடி அதிமுக., ஒன்றிய துணை செயலாளர் சண்முகபாண்டியன் உடன் இருந்தனர்.இதுகுறித்து குற்றம் குற்றமே புலனாய்வு வார இதழ் சார்பாக தொடர்பு கொண்டு கேட்டபோது கவிதா சசிகுமார் கூறுகையில்: நடந்து முடிந்த தேர்தலின் மூலம் தெரிந்து விட்டது மக்கள் டி டி வி தினகரனை ஏற்றுக் கொள்ள வில்லை என்று அதன்படியின் காரணமாக மீண்டும் தன்னை தாய் கழகத்தில் இணைத்து கொண்டேன் என்று கூறினார்.