திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்தும் வகையில் நலத்திட்ட உதவிகள்…

திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்தும் வகையில் அவர்களுக்காக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. திருநங்கைகளும் சமூக அந்தஸ்தை பெறும் நோக்கில் அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள  தொழில் வர்த்தக சபையில் நடைபெற்றது. ரோட்டரி ஐ கான், பிராக்ஸ் ஏர் அமைப்புகள் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட காவல்துறை  துணை ஆணையர் பாலாஜி சரவணன்  தலைமை ஏற்றார்.

 

இதை தொடர்ந்து பேசிய, பாலாஜி சரவணன்,  சமூகத்தின் இடையே இருக்கும்  அவப்பெயர்களை நீக்கும் வகையில் திருநங்கைகள் பண்போடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். பொது மக்களுடன் சகோதரத்துவதுடன் பழகும் வாய்ப்பை  திருநங்கைகள்  ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறிய  துணை ஆணையர்,கோவை மாவட்டத்தில் இனி புகார்கள் வராத வகையில் திருநங்கைகள் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

இதனை தொடர்ந்து திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் டிபன் கை வண்டி, தையல் மிஷின், சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை துணை காவல் ஆணையர் பாலாஜி சரவணன்  திருநங்கைகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.


Leave a Reply