4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கு – முன்னாள் ராணுவ வீரரை கைது செய்ய கோரிக்கை

Publish by: --- Photo :


சென்னை அருகே 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ராணுவ வீரரின் மகன் தன்னை மிரட்டி புகாரை வாபஸ் பெற வைக்க முயற்சிப்பதாக சிறுமியின் தந்தை காவல் ஆணையரிடம் புகார் அளித்து இருக்கிறார். இது தொடர்பாக இவர் அளித்து இருக்கும் மனுவில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ராணுவ வீரரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சிறுமியின் தந்தை கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

 

முன்னாள் ராணுவ வீரரின் மகன் தன்னை மிரட்டி புகாரை வாபஸ் பெற வைக்க முயற்சிப்பதாகவும், மன உளைச்சளுக்கு உட்படுத்தும் வகையில் தொடர்ந்து தொந்தரவு கொடுப்பதாகவும் மனுவில் தெரிவித்து உள்ளார். வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரை சிறுமியின் தந்தை கேட்டுக் கொண்டு உள்ளார்.

 

குற்றவாளிகளை வெளியே எடுக்க அவரது குடும்பத்தினர் முயற்சிப்பதால் போலீசார் குற்ற பத்திரிக்கையை தொடர்ந்து தாக்கல் செய்ய வேண்டும் என சமூகநல ஆர்வலர் ஒருவர் வலியுறுத்தி உள்ளார். திருமுள்ளிவாய் சிறுமி கொலை வழக்கில் உடற்கூராய்வு அறிக்கை, தடயவியல் அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் கிடைப்பதில் தாமதம் ஆவதால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக காவல் துறை தரப்பு தகவல் அளித்துள்ளது.


Leave a Reply