பணி நியமன முறைகேடு: 3 முன்னாள் எம்‌.எல்‌.ஏ.க்கள். மீது வழக்கு

பணி நியமன மோசடி தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனர் உட்பட 3 முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கை பதிவு செய்து உள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் பள்ளிக்காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நியமனத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற நேர்காணலில் பள்ளிக்காவலர்கள் 8 பேரும், 20 துப்புரவு ஊழியர்களும் தேர்வு செய்யப்பட்டனர். பணி நியமனத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கணேசன் என்பவர் வழக்கு தொடுத்தார்.

 

அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு விசாரணை தொடங்கியது. மோசடி தொடர்பாக கடந்த ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த முத்து ராமலிங்கம், கதிரவன், ஏ.கே. போஸ் மற்றும் பள்ளிக்கல்வி துறையின் இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மற்றும் அதிகாரிகள் இருவர் உயிரிழந்த நிலையில் எஞ்சியவர்களிடம் விசாரணை நடத்த திட்டம் இடப்பட்டு உள்ளது.


Leave a Reply