காரோடு எரிந்த நிலையில் இளைஞர் உடல் மீட்பு! நண்பர்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே எரிந்த நிலையில் காருக்குள் இருந்து இளைஞரின் உடல் மீட்க்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.வேடசந்தூர் அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த சிவா என்ற இளைஞர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தார். இவர் தோப்புப்பட்டி என்ற கிராமத்தில் இரவு கரகாட்டம் பார்க்க தனது காரில் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பாத நிலையில் அவர் சென்ற கார் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேலாயுதம்பாளையம் கணவாய் பகுதியில் எரிந்த நிலையில் கண்டு எடுக்கப்பட்டது.

 

காருக்குள் கருகிய நிலையில் சிவாவின் உடல் மீட்கப்பட்டது. கார் எரிந்து கிடந்த இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட காவல் துறையினர் கரகாட்டம் பார்க்க சென்ற சிவா எதற்காக வேலாயுதம்பாளையம் கணவாய் பகுதிக்கு சென்றார்? அவருடன் வேறு யாரும் சென்றார்களா? அவர் எரித்து கொலை செய்யபட்டாரா? அல்லது காரில் தீப்பற்றி அவர் எரிந்தாரா? என பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர். சிவாவின் செல்ஃபோன் அழைப்புகளை ஆராய்ந்த போது அவர் கடைசியாக விவேக் என்பவருடன் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து விவேக்கிடம் விசாரணை நடத்திய போது சிவாவின் நண்பரான அவர் வடிவேலு, முனுசாமிஆகியோருடன் சேர்ந்து சிவாவை கொலை செய்தது தெரிய வந்தது.

 

விவேக்கின் மனைவிக்கு சிவா அடிக்கடி பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனை பலமுறை கண்டித்தும் சிவாவின் தொல்லைகள் தொடர்ந்ததால் கரகாட்டம் பார்க்க போகலாம் எனக்கூறி விவேக் சிவாவை அழைத்து உள்ளார். வடிவேலு,முனுசாமி ஆகிய பிற நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மது அருந்தியுள்ளனர். சிவா நல்ல போதையில் இருந்த போது அவரை கட்டையால் அடித்தும், கழுத்தை இறுக்கியும் கொலை செய்த மூன்று நண்பர்களும் அவரது காரிலேயே அவரை வைத்து எரித்துக்கொன்றனர்.


Leave a Reply