மனைவியுடன் பேசிக்கொண்டே பரோட்டா சாப்பிட்ட கணவர் மரணம்

கருவடிக்குப்பம் பாரதி நகரை சேர்ந்த புரூசோத்தமன் என்பவருக்கும், நெல்லையை சேர்ந்த சண்முக சுந்தரி என்பவருக்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.சண்முக சுந்தரி தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு உணவகம் ஒன்றில் வாங்கி வந்த பரோட்டாவை சாப்பிட்டுக்கொண்டே மனைவியுடன் புரூசோத்தமன் செல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.சிறிது நேரத்தில் அவரது பேச்சு நின்று முனங்கல் சத்தம் மட்டும் கேட்டு இருக்கிறது.

 

உடனடியாக சண்முக சுந்தரி உறவினர்களை அழைக்க, அவர்கள் வந்து பார்த்த போது புரூசோத்தமன் இறந்து கிடந்துள்ளார். பிரேத பரிசோதனையில் செல் ஃபோன் பேசிக்கொண்டே பரோட்டா சாப்பிட்ட போது அதன் ஒரு பெரிய துண்டு சுவாசக்குழாயில் சிக்கி அவர் உயிர் இழந்து இருப்பது தெரிய வந்துள்ளது. பொதுவாக சாப்பிடும் போது புத்தகம் படிப்பதோ,செல் ஃபோன் பார்ப்பதோ கூடாது என்று கூறும் பெரியவர்களும், மருத்துவர்களும், சாப்பிடும் போது பேசக்கூடாது என்பதையும் வலியுறுத்துவார்கள்.

 

இதற்கு காரணம் நமது வாயில் இருந்து உணவுக்குழாய் தொண்டை வழியாக வயிற்றுக்கு போகிறது அதே போல மூக்கில் இருந்து சுவாசக்குழாய் ஆனது தொண்டை வழியாக உணவுக்குழாயை கடந்து நுரையீரலுக்குள் செல்கிறது.எனவே நாம் சாப்பிடும் போது சுவாசப்பாதை மூடி கொள்ளும். உணவு அதை கடந்து போனதும் மீண்டும் திறந்து கொள்ளும். உணவு உண்ணும் போது பேசுவதை தவிர்க்க வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரையை கடைபிடிப்பதே நல்லது.


Leave a Reply