கால்வாயில் கவிழ்ந்த பேருந்து 29 பயணிகள் உயிரிழப்பு

உத்திரபிரதேச மாநிலம் 165 கிலோ மீட்டர் நீளம் கொண்ட யமுனை எக்ஸ்ஸ்ப்ரஸ் ரயில்வே சாலையில் இன்று அதிகாலை அம்மாநில அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. லக்னோவில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த படுக்கை வசதி கொண்டிருந்த அந்த பேருந்தில் 46 பேர் பயணித்து இருந்தனர். அதிகாலை 4.30 மணியளவில் பாலத்தின் மீது பேருந்து சென்ற போது ஓட்டுனர் கண் அயர்ந்துவிட்டார்.

 

அப்போது பாலத்தடுப்பை உடைத்துக்கொண்டு 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பேருந்து கால்வாயில் கவிழ்ந்து உருக்குலைந்தது. இந்த கொடூர விபத்தில் 29 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கால்வாயில் மூழ்கி கிடந்த அவர்களது சடலங்களை உள்ளூர் வாசிகளும், மீட்பு குழுவினரும் போராடி மீட்டனர். படுகாயமுற்ற பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.ஜெ‌சி‌பி உதவியுடன் பேருந்தானது மீட்கப்பட்டது.

 

விபத்து தொடர்பாக விசாரணை நடத்த போக்குவரத்து ஆணையர் தலைமையில் அம்மாநில முதலமைச்சர் குழு அமைத்து 24 மணி நேரத்துக்குள் உள்ளாக அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இந்த விபத்தால் மன வேதனை அடைந்து இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், மோடி தெரிவித்து இருக்கிறார்.


Leave a Reply