முதுகுளத்தூர் அருகே வளநாடு விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வளநாடு இந்திரா நகர் கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் 06.7.2019 காலை 10 மணியளவில் கணபதி பூஜையுடன் தொடங்கியது. மாலை 4 மணியளவில் முதலாம் கால யாக பூஜை, ஜெப பாராயணம் நடந்தது. நேற்று (07/7/2019) காலை 8.30 மணியளவில் 2ம் யாக கால பூஜை, மாலை 5 மணியளவில் 3ம் யாக கால பூஜை, நடைபெற்றது. இன்று (08.7.2019) காலை 6 மணியளவில் 4 ஆம் கால யாக பூஜை, கடங்கள் புறப்பாடு நடை பெற்றது, இதை தொடர்ந் காலை 10:25 மணியளவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

தொழிலதிபர் ஆவடி பி.சுந்தர்ராஜன், டாக்டர் பி.எஸ்.அரிகோவிந்த், பரமக்குடி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.வி.ஆர். ராம் பிரபு ஆகியோர் தலைமை வகித்தனர். ராமநாதபுரம் மூத்த வழக்கறிஞர் என்.சந்திரன், பரமக்குடி வருவாய் ஆய்வாளர் (ஓய்வு) கே.கருப்பையா, சிங்கப்பூர் தொழிலதிபர் கே.சமய துரை – தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஏராளமானோர் கலந்து விநாயகரை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் கமிட்டி, கும்பாபிஷேக குழு நிர்வாகிகள் மற்றும் வளநாடு இந்திரா நகர் பொதுமக்கள் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்தனர்.


Leave a Reply