” டெல்லிக்கு அனுப்ப சொன்னா …திஹாருக்கு அனுப்பிடுச்சே திமுக “வைகோ-வை கலாய்த்த கஸ்தூரி !!!!

கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அப்போதைய திமுக சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ மீது எம்.பி,எம்.எல்.ஏ க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. தேசத்துரோக வழக்கில் வைகோ மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால் அவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதத்தை வழங்க உத்தரவிட்டார்.அபராத தொகையை உடனே கட்டிய வைகோ தண்டனை நிறுத்தி வைக்க மனு அளித்தார்.

கைதாவதில் இருந்து தவிர்க்க ஜாமின் கேட்டு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்தார்.இவ்வழக்கில் நீதிபதி தீர்ப்பினை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்தும்,ஜாமினையும் வழங்கி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தது.மாநிலங்களவை எம்.பி.க்கு அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், அவர் போட்டியிட முடியுமா என்பது தேர்தல் அதிகாரியின் கையில் உள்ளது – தேச துரோக வழக்கு என்பதால், போட்டியிட வாய்ப்பு குறைவு என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்திள்ளனர்.

 

 

இந்த நிலையில் இத்தீர்ப்பு குறித்து நடிகையும்,அரசியல் விமர்சகருமான கஸ்தூரி தனது ட்வீட்டரில் வை.கோ-வை கலாய்த்து பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அவரது ட்வீட்டரில் ” எண்ணையை தடவிகிட்டு மணல்ல புரண்டாலும் ஒட்டுறது தான் ஒட்டும் – பழமொழி.எம்.பி பதவிக்காக எம்பி எம்பி (அணி) தாவினாலும் கிட்டுறது தான் கிட்டும் – புதுமொழி.டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிடுச்சே திமுக !எம்.பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சருச்சே ! “என்று பதிவிட்டு வை.கோ-வை கலாய்த்துள்ளார்.

 

கடந்த மக்களவை தேர்தலில் திமுக-வுடன் கூட்டணி வைத்தது மதிமுக.கூட்டணி 37 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.கூட்டணி ஒப்பந்தப்படி வை.கோ-விற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்க வேண்டும்.திமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் வை.கோ-விற்கு ராஜ்யசபா எம்.பி பதவி கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.இந்த நிலையில் வை.கோ-வை கலாய்த்து நடிகை கஸ்தூரி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply