ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரங்களில் வெளியே செல்லக்கூடாது – பள்ளிக்கல்வித்துறை

பள்ளி வேலை நேரங்களில் ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் வெளியே செல்லக் கூடாது என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரித்து உள்ளது.பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் பள்ளியின் நிர்வாக  விவரங்கள் , மாணவர் ஆசிரியர் விவரங்கள் போன்றவை பள்ளி மேலாண்மை இணையதளமான இ‌எம்‌ஐ‌எஸ் இல் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளதை  சுட்டி காட்டியுள்ளார்.

 

இந்த விவரங்களுக்காக ஆசிரியர்களை நேரில் அழைத்து கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் நடத்த வேண்டி இருந்தால் மாலை நேரம் அல்லது சனிக்கிழமை நடத்தலாம் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால்  பள்ளி வேலை நேரம் பாதிக்கப்படாது என்பது சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. மேலும், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரங்களில் பள்ளி அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், தேவைப்படும் விவரங்களை மின்னஞ்சல் வழியே அனுப்பினால் பள்ளி வேலை நேரம் பாதிக்கப்படாது என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Leave a Reply