விதி மீறினால் 23,000 ரூபாய் வரை அபராதம்

விதிமுறைகளை மீறி வாகனம் நிறுத்துபவர்களுக்கு நாளை முதல் 23,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. மும்பையில் 26 அங்கீகரிக்கப்பட்ட பொது4 வாகன நிறுத்தங்கள் அமைந்துள்ளன.இந்நிலையில் இந்த நிறுத்தங்களை சுற்றி 500 மீட்டர் தூரத்திற்கு விதிமுறைகளை மீறி வாகனத்தை நிறுத்தினால் 5000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மும்பை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல் துறை அறிவித்து உள்ளது.

 

இதில் அபராத தொகையும், வாகனத்தை விதிமுறைகளை மீறி நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து அகற்றுவதற்கான கட்டணமும் அடங்கும். மேலும், அபராத தொகை செலுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டால் வாகனத்தை பொருத்து நாளுக்கு நாள் அபராதத்தொகை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விதிமுறைகளை செயல்படுத்துவதற்கு முன்னாள் ராணுவ அதிகாரிகளும், தனியார் பாதுகாவலாளர்கள் போக்குவரத்து காவல் துறைக்கு உதவ வேண்டும் என்றும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.


Leave a Reply