50 வருடங்களுக்குள் உருவாக்கப்பட்ட உலகின் சிறந்த 150 பல்கலைக்கழகங்கள்

கடந்த 50 ஆண்டுகளில் உருவான உலகின் சிறந்த 150 பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கான உலக தரவரிசையை வெளியிடும் நிறுவனமான குவாக்கரலிஸ் சைமன்ஸ் நிறுவனத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான தரவரிசை வெளியிடப்பட்டு உள்ளது.கற்பிக்கும் திறன் , ஆசிரியர் மாணவர் விகிதம்,ஆய்வுத் திறன், சர்வதேச ஆசிரியர்கள் ,சர்வதேச மாணவர்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குவாக்கரலிஸ் சைமன்ஸ் தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

 

அந்த வகையில் 71 முதல் 80 இடங்களுக்குள் இருக்கும் பல்கலைக்கழக பட்டியலில் இந்தியாவின் ஐ‌ஐடி0 குவாகத்தியும், 101 முதல் 150 வரை இடங்களுக்குள் இருக்கும் பல்கலைகழகங்களில், அண்ணா பல்கலைகழகம், ஹரியானா மாநிலத்தில் ஜிண்டால் குளோபல் பல்கலைகழகம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. பல்கலைகழகங்களில் சிறந்த ஆய்வு திறன் கொண்ட பல்கலைகழகம் என்ற வகையில் அண்ணா பல்கலைகழகம் ஒன்பதாவது இடத்தை பெற்றுள்ளது. இதற்கு முந்திய 8 இடங்களை ஐ‌ஐடினக்கள் பிடித்துள்ளன.


Leave a Reply