தென்னிந்தியாவிலேயே மிக அதிக பரப்பளவு கொண்ட குழந்தைகளுக்கான நவீன உள் அரங்க விளையாட்டு மையம் கோவையில் துவங்கப்பட்டது

வளர்ந்து வரும் நவீன உலகில் குழந்தைகளுக்கென பல்வேறு விதமான நவீன வகை விளையாட்டு மையங்கள் தற்போது உள்ளன. இது போன்று நவீன விளையாட்டு மையங்கள் பெரிய அளவிலான வணிக வளாகங்களில் மட்டுமே உள்ளது.இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சுமார் 35,000 சதுர அடி பரப்பளவில் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட நவீன வகையிலான FUN XTREME எனும் பெயரில் கேம் சோன் துவக்கப்பட்டுள்ளது.

பிரவீண், கார்த்திக்,சையத் மற்றும் சதீஷ் என நான்கு பங்குதாரர்களை கொண்டு துவக்கப்பட்ட இதன் துவக்க விழாவில் பிரபல இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி விளையாட்டு மையத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். தென்னிந்தியாவிலேயே அதிக பரப்பளவு கொண்ட இந்த மையத்தில் வாரியர் நிஞ்சா,ரோப்ஸ்,கிளிம்பிங் வால்,டேஷிங் கார்ஸ் என வெளிநாடுகளில் பிரபலமான விளையாட்டு கருவிகள் உள்ளடக்கிய பல்வேறு வகையான 30 க்கும் மேற்பட்ட நவீன விளையாட்டு மெஷின்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான சிறுவர்கள் விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் கோவை நகர மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply