வங்கிகளுக்கான தேர்வுகளை தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் எழுதலாம்: மத்திய அரசு

பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் இனி எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய அமைச்சரவையில் பேசிய நிர்மலா சீதாராமன் கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகள் இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.இனி இந்த தேர்வுகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி உட்பட 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்றும், தேர்வர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து தேர்வு எழுத முடியும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.


Leave a Reply