ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பிறந்தவர் தான் ஸ்டீவ் இர்வின். குழந்தை முதலே வனவிலங்கு உயிரினங்களோடு சகஜமாக பழகி வந்த இர்வின், தனது 6 வது வயதில் மலைப்பாம்புகளோடு விளையாட ஆரம்பித்தார்.9 வது வயதில் முதலைகளை கையாள கற்றுக்கொண்டார். இவரின் மனைவி டெரியும் முதலை வேட்டையாளர் தான்.இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. அவர்கள் இருவரையும் விலங்கு பிரியர்களாகவே வளர்த்தார் இர்வின்.
இர்வின் அனைவருக்கும் பரிட்சயமானவர் என்றாலும், இவர் மிக பிரபலமானது க்ரோகோடைல் ஹண்டிங் நிகழ்ச்சிக்கு பிறகு தான்.1996 இல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலைகளோடு எந்த வித பாதுகாப்பும் இன்றி இவர் காட்டிய சாகசம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. வன உயிரினங்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த இர்வின் தனது இறப்பையும் அவ்வழியே தேடிக் கொண்டார். 2006 ஆம் ஆண்டு கடலில் வாழும் ஆபத்தான உயிரினங்கள் குறித்த ஆவணப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது மீன் தாக்கி உயிரிழந்தார். இர்வினின் சரணாலயத்தை கவனித்து வந்த அவரது மகன் ராபர்ட், தனது தந்தைக்கு பெருமை சேர்க்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் ஒரு புகைப்படத்தில் 15 வருடங்களுக்கு முன்பு இர்வின் ஒரு முதலைக்கு இறைச்சியை வீசுகிறார். மற்றொரு படத்தில் அவரது மகன் ராபர்ட் இர்வின் நின்ற அதே இடத்தில் அதே முதலைக்கு இறைச்சியை வீசுகிறார். இந்த புகைப்படங்களோடு தந்தையும் நானும் முதலைக்கு உணவு அளிக்கிறோம், அதே இடத்தில், அதே முதலைக்கு, 15 வருடங்களுக்கு பின்னர் என்றும் பதிவிடப்பட்டு இருந்தது.