உலகக்கோப்பையில் விளையாடி வரும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக 90 கிலோவில் 8 அடி உயர சாக்லேட் உலகக்கோப்பை

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பொள்ளாச்சியில் 90 கிலோ எடை கொண்ட சாக்லேட் கொண்டு உலகக்கோப்பை தயாரித்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்கள் வியப்பு.பத்து நாடுகளுக்கிடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.இதில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது.

 

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும்.கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார் அடுமனையில் 90 கிலோ சாக்லேட் மூலம் எட்டு அடி உயரத்திற்கு தயாரிக்கப்பட்ட உலகக் கோப்பை பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டுள்ளது.

15 நாட்களாக அடுமனை ஊழியர்கள் சாக்லேட் மூலம் தயாரிக்கப்பட்ட உலகக் கோப்பையை அடுமனைக்கு வரும் வாடிக்கையாளர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.இறுதிப் போட்டி வரை பார்வைக்காக வைக்கப்படும் இந்த உலகக் கோப்பையை  இறுதிப்போட்டியில் இந்தியா வென்றால் அதை ரசிகர்களுக்கு கொடுப்பதாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தனியார் அடுமனை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

உலகக்கோப்பையில் விளையாடி வரும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக 90 கிலோ சாக்லேட்டினால் உருவாக்கப்பட்ட 8 அடி உயர உலகக்கோப்பையினை கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு வியப்படைந்துள்ளனர்.


Leave a Reply