இராமநாதபுரம் அருகே காதல் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன்

இராமநாதபுரம் அருகே காதல் மனைவியை கழுத்து நெரித்து கொன்ற கனவனை‌ போலீசார் தேடி வருகின்றனர்.இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அடுத்த மெஹந்தி நாகாச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவகாமி என்பவரை காதலித்து கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆகாஷ் கனிஷ்கா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கும் சூழலில் கணவன் மனைவி இடையே கடந்த ஓராண்டாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

இதுதொடர்பாக சிவகாமி கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கணவன் மாமியார் மற்றும் கணவனின் சகோதரி ஆகியோர் தன்னை தொடர்ச்சியாக அடித்து சித்ரவதை செய்வதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவகாமி புகார் அளித்துள்ளார். புகாரை காவல்துறையினர் முறையாக விசாரிக்காமல் கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மெஹந்தி நகராட்சி பகுதியில் ஒரு இழப்பின் காரணமாக கிராமத்தினர் அனைவரும் அங்கு சென்று விட்ட சூழலில் நேற்று இரவு இழப்பிற்கு சென்றுவிட்டு சிவகாமி அதே பகுதியில் இருக்கும் தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றபோது பின்னால் வந்த ராஜா அவரை ஆடு கட்டும் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

அதிகாலையில் உறவினர்கள் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக பரமக்குடி டிஎஸ்பி சங்கர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தப்பியோடிய கணவன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Leave a Reply