வங்கி கணக்கை தொடங்கவும், செல் ஃபோன் இணைப்பை பெறவும் ஆதார் அட்டையை விருப்பத்தின் பேரில் முக்கிய ஆவணமாக தாக்கல் செய்ய வழிவகுக்கும் சட்டதிருத்த மசோதா நேற்று மக்களவையில் ஒரு மனதாக நிறைவேறியது. ஆதார் தொடர்பான தனி நபர் தகவல்களை பாதுகாப்பதற்கும் கடுமையான விதிகளை இந்த சட்ட திருத்த மசோதா அமல்படுத்த உள்ளது.
மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் ஆதார் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசுகையில் ஆதார் அட்டை தொடர்பான சங்கம் மக்களுக்கு இசைவானதாக இருக்கும் என்று உறுதியளித்தார். ஆதாரை தவறாக பயன்படுத்துவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எந்த குடிமகனும் ஆதார் அட்டையை காட்ட கட்டாயபடுத்தப்பட்ட மாட்டார்கள் என்ற போதும், அவரவர் விருப்பத்தின் பேரில் ஆதாரை ஆவணமாக பயன்படுத்தலாம் என்றும் ரவி சங்கர் பபிரசாத் தெரிவித்தார்.
123 கோடி மக்கள் ஆதார் என் பெற்றுள்ளனர் என்றும், அவர்களில் 70 கோடி செல்ஃபோன் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். வங்கி கணக்கு தொடங்குவதற்கும், செல் ஃபோன் இணைப்பை பெறுவதற்கும், பல்வேறு அரசு செயல்களிலும் ஆதார் அட்டையின் பங்கு மிக முக்கியத்துவம் பெறுவதற்கு இந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது.