பிரபல சமூக வலைதளங்கலான பேஸ் புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகியவற்றில் புகைப்படங்களை பதிவேற்றல் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியாததால் பயானாளர்கள் அவதி அடைந்து உள்ளனர். இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக நீடித்த இந்த பிரச்சனையால் சமூகவலைத்தள செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஃபேஸ் புக்கில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள் எதும் தெரியாததாலும், வாட்ஸ் ஆபில் அனுப்பப்பட்டுள்ள புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய முடியாததாலும் இந்த சமூக வலைதளங்களை மையமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனங்கள் பாதிப்படைந்தன. புகைப்படங்களை செல் போன்களில் பதிவேற்றம் செய்ய முடியாததால் பயனாளிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பேஸ் புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகிய மூன்றும் ஃபேஸ் புக் நிறுவனத்தின் கீழ் இயங்குவதால் அவற்றின் சர்வரில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம். பொதுவாக சமூக வலைதளங்கள் முடங்கும் போது பிரச்சனை உடனடியாக சரிசெய்யபடும் நிலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பிரச்சனை சரி செய்யபடவில்லை.