தேசிய அளவிலான வீல் சேர் கூடைப்பந்து போட்டி – 2ஆம் இடம் பிடித்த தமிழக மகளிர் அணி

தேசிய அளவிலான 6 வது வீல் சேர் கூடைப்பந்து போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மகளிர் அணி இரண்டாவது இடத்தையும், ஆடவர் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இந்த போட்டி நடைபெற்றது. தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து கொடுத்தால் அடுத்த மாதம் சென்னையில் நடைபெற இருக்கும் சர்வதேச போட்டியில் வெற்றி பெற முடியும் என்று வீரர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.

 

ஒவ்வொரு போட்டியில் பங்கேற்பதற்கும் தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோரின் உதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக வேதனையுடன் கூறும் வீரர்கள் மத்திய மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். தேசிய அளவிலான வீல் சேர் கூடைப்பந்து போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


Leave a Reply