வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – முதல்வர் எச்சரிக்கை

மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருவதால் மும்பை மாநகரமே மும்பையில் மிதக்கிறது. தொடர் கனமழையினால் பல்வேறு சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளிலும் மழை நீர் புகுந்ததை அடுத்து அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக இதுவரை 16 பேர் பலியாகியுள்ளதாக தகவல்.

 

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.வானிலை ஆய்வு மையம் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருவதால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Leave a Reply