பெண்கள் விடுதிக்குள் நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாணவன்

சென்னை அபிராமபுரத்தில் பெண்கள் விடுதிக்குள் நுழைந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதுடன் பணத்தையும் திருடிய கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.அபிராமபுரம் பசுமை வழிச்சாலையில் செவிலியர்களுக்கான தனியார் விடுதி உள்ளது. அங்கு நள்ளிரவில் நுழைந்த இளைஞர் மாடிக்கு சென்று திறந்து இருந்த அறைக்குள் நுழைந்ததாகவும், உறங்கி கொண்டிருந்த பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறினர்.

 

அறையில் பெண் ஒருவர் 80,000 ரூபாய் பணத்துடன் வைத்திருந்த கைப்பையை எடுத்து கொண்டு இளைஞன் தப்பி ஓட முயற்சித்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்போது சத்தம் கேட்டு ஒரு பெண் எழவே அந்த இளைஞனை பார்த்து கூச்சல் போட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது சாலை ஒர நடைமேடையில் உறங்குவது போல் நடித்து தப்பிக்க முயற்சித்த இளைஞன் சிக்கி கொண்டான்.

 

அவனை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அதே பகுதியை சேர்ந்த சரத் என்பதும், வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.சரத்தை கைது செய்த போலீசார் பணத்தை மீட்டதுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவனது தாய் அதே விடுதியில் பணி புரிந்ததாகவும் அந்த சமயத்தில் சரத் அடிக்கடி அங்கு சென்று வந்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.


Leave a Reply