அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக யுரேனியத்தை வைத்துள்ளது ஈரான்

சர்வதேச அணுஆயுத ஒப்பந்தத்தை மீறும் வகையில் நிர்ணயித்த அளவுக்கு அதிகமாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்துள்ளதாக ஐ.நா.முகமை கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை விடுத்துள்ள அறிக்கையில் 300 கிலோவிற்கு அதிகமான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்துள்ளதாக கூறப்பட்டதுள்ளது.

 

இதனை ராணுவம் ஒப்புக்கொண்டு உள்ளது. ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது நிர்ணயித்த அளவை விட செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் உற்பத்தி செய்துள்ளது என்றார். பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கி கொள்ளாவிட்டால் யுரேனியம் செறிவூட்டல் தொடரும் என ஏற்கனவே சொன்னதை தான் இப்போதும் ஈரான் அரசு செய்து உள்ளது என்றார்.

 

ஒபாமா ஆட்சிக்காலத்தில் 2015 ஆம் ஆண்டு ஈரானுடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைத்து அணு சக்தி பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர். இதன்படி அணுசக்தியை ஆக்கபூர்வமான பணிகள் தவிர வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்று ஈரானுக்கு நிபந்தனை விதிக்கபட்டது. ஆனால் டிரம்ப் பொறுப்பு வந்த பின்னர் அந்த ஒப்பந்தத்திலிருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா விலகியது.

 

இதனை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்து உள்ளது. இந்நிலையில் செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை ஈரான் அதிகப்படுத்தி உள்ளது குறித்து ஐரோப்பிய நாடுகள் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து ஐரோப்பிய நாடுகள் ஒன்று கூடி விவாதித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனியம் அணு குண்டு தயாரிக்க பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply