போலந்து விண்வெளி ஆராய்ச்சிக்கான பயிற்சிக்கு செல்லும் மாணவி உதய கீர்த்திகாவுக்கு பாராட்டு விழா

விண்வெளி பயிற்சி மேற்கொள்வதற்காக போலந்து செல்ல உள்ள தமிழக மாணவி உதய கீர்த்திகாவிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. தேனியை சேர்ந்த உதய கீர்த்திகா என்ற மாணவிக்கு விண்வெளித்துறையில் அப்துல்கலாம் போல் சாதிக்க வேண்டும் என்று ஆர்வம்.

 

இதன் காரணமாக கீர்த்திகாவின் தந்தை தாமோதிரன் குடும்ப வறுமையையும் பொருட்படுத்தாமல் உக்ரைன் நாட்டில் உள்ள விமான படை கல்லூரியில் சேர்த்துள்ளார். 4 ஆண்டு படிப்பை திறம்பட முடித்த உதய கீர்த்திகா போலந்து நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்கான பயிற்சிக்கு தேர்வு ஆகியுள்ளார்.

 

இரண்டு மாதங்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் புவிஈர்ப்பு இல்லாத இடத்தில் இருப்பது உள்ளிட்ட விண்வெளிக்கு செல்பவர்களுக்கான முக்கியமான பயிற்சிகள் அளிக்கப்பட இருக்கின்றன.இந்நிலையில் விண்வெளிக்கு சென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் அளவில் தகுதி பெற்று இருக்கும் உதய கீர்த்திகாவிற்கு தேனி மாவட்டம் நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

 

இதில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விழாவில் உதய கீர்த்திகாவின் பெற்றோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சிக்கான பயிற்சிக்காக வரும் 10 ஆம் தேதி உதய கீர்த்திகா போலந்து செல்ல உள்ளார்.


Leave a Reply