2017-18 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கும் மடிக்கணினி அடுத்த மூன்று மாதத்தில் வழங்கப்படும்- பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் பேட்டி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, ஒவ்வொரு துறையும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழர்களுக்கான கொண்டிருக்கிறது. அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்கள் தமிழகத்தில் நிலவி வருகிறது.

 

இந்தியாவிற்கு ஒரு முன்னோடி மாநிலமாக துறைவாரியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.பள்ளிக் கல்வித் துறையை பொருத்தவரை இந்தியாவில் இல்லாத அளவிற்கு பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு படிப்பு முடித்து சென்றவர்களுக்கும் மடிக்கணினி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு புதிதாக கொண்டுவந்துள்ள பாடத்திட்டம் 240 நாட்கள் படிக்க வேண்டியுள்ளது.அம்மா பொறுப்பில் இருந்தபோது 37 லட்சம் மடிக்கணினி வாங்கினார்கள்.

தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 21 லட்சத்து 20 ஆயிரம் மடிக்கணினிகள் நான்கு கட்டமாக வழங்கி வருகிறோம்.2017-18 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கும் மடிக்கணினி அடுத்த மூன்று மாதத்தில் வழங்கப்படும்.பள்ளிக் கல்வித் துறையை பொருத்தவரைக்கும் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது புதிய திட்டங்கள் குறித்து இரண்டாம் தேதி சட்டமன்றத்தில் அறிவிக்கும் போது தெரிந்து கொள்ளலாம்.கடந்த 2004ஆம் ஆண்டு ஆசிரியர்களை பணியமர்த்தும் போதே ஓய்வூதியத் திட்டத்தை பற்றி தெளிவாகக் கூறி தான் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள்.

 

அதைதான் அரசு தற்போது செய்து வருகிறது தமிழக அரசு இதுவரை மனித நேயத்தோடு எல்லோருக்கும் அனைத்து பணியையும் நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தாலும் இன்று இருக்கும் நிதி நெருக்கடியில் எல்லோரும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை கொண்டு வரும் போது ஆசிரியர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அப்போது, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.


Leave a Reply