தோனியை சீண்டிய சச்சின்!பதிலடி கொடுத்த ரசிகர்கள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த சனிக்கிழமை இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சில் இந்திய அணி தடுமாறி 224 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தது. இந்திய அணியின் தடுமாற்றமான பேட்டிங்கை ரசிகர்கள் பலரும் விமர்சித்து இருந்தனர். இதனை தொடர்ந்து முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரும் கருத்து தெரிவித்திருந்தார்.

 

அதில் அவர் இந்திய அணியின் பேட்டிங் அதிருப்தி அளிக்கிறது என்றும், குறிப்பாக ஜாதவ், மற்றும் தோனியின் பேட்டிங்கை கண்டு தான் ஏமாற்றம் அடைந்தேன் என கூறினார். மேலும் தோனி தனது முழு திறமையை வெளிப்படுத்தவில்லை என்றும் , அவரின் மெதுவான ஆட்டத்தை கண்டு ஏமாற்றம் அடைந்தேன் என்றும் கூறினார். இதனை தொடர்ந்து தோனி கொஞ்சம் பாஸிட்டிவாக விளையாடி இருந்தால் அணி இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பித்து இருக்கும் எனவும் கூறினார்.

 

இதற்கு தோனி ரசிகர்கள் சச்சினுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். அதில் ஒரு நபர் சச்சின் 2013 ஆம் நடந்த உலக கோப்பை போட்டியை சற்று திரும்பி பார்க்க வேண்டும் என்றும், மற்றொரு நபர் பாஸிட்டிவாக விளையாடி இருக்க வேண்டும் என கூறும் தாங்கள் 90களில் தாம் விளையாடிய ஆட்டத்தையும் தான் பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும்,சச்சின் இப்போதும் சுயநலத்துடன் நடந்து கொள்கிறார் என்றும், சச்சினை விட தோனி அதிக போட்டிகளில் வெற்றி பெற்று தந்துள்ளார் என்பதை சச்சின் மறக்க கூடாது என்றும் கூறினர். இதற்கு சச்சின் ரசிகர்களும் பதில் கருத்து தெரிவித்தனர்.

 

அதே வேளையில் சில நபர்கள் சிறப்பான ஆட்டத்தை இருவருமே வெளிப்படுத்தியுள்ளதால் இருவருமே லெஜண்டுகள் தான் என்றும் கூறினர். இதனை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல் தோனி பற்றி யாரும் கவலை பட தேவையில்லை என்றும், தோனியின் திறமையை பற்றி தனக்கு நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார். மேலும், தோனி சரியான நேரத்தில் மீண்டும் எழுவார் எனவும் தெரிவித்துள்ளார்.


Leave a Reply