முதன் முதலாக செயலாளர் பதவிக்கு திருநங்கை தேர்வு: லயோலா கல்லூரி சங்க தேர்தல்

லயோலா கல்லூரியில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் முதன் முறையாக திருநங்கை ஒருவர் வெற்றி பெற்று செயலாளராகியிருக்கிறார். அவரின் பெயர் நளினி பிரசித்தா.இது மாணவரின் யூனியன் தேர்தல். ஜூன் 21 ஆம் தேதி நடைபெற்றது. இது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிறர் போட்டியிடுவர். லயோலா கல்லூரியில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் படிக்கின்றனர்.

 

ஆண்கள் ஆயிரக்கணக்கானோர் படிக்கின்றனர். அதில் உள்ள 500 பெண்களுக்கான தேர்தல் பதவியில் தான் இவர் இடம் பெற்றுள்ளார். கூடை பந்து, கால் பந்து ஆகிய குழுக்கள் அமைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போவதாவும், சைபர் கிரைம் பற்றி விழிப்புணர்வு கொடுப்பதாகவும் கூறினார்.

 

இந்திய அளவில் திருநங்கைகள் அதிக அளவில் கல்லூரியில் படிப்பதில்லை என்றும், அதிலும் தேர்தலில் திருநங்கைகள் இல்லை என்றும், மற்றும் தனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டு விட கூடாது என்பதற்காகவும், இதில் வெற்றி அடைந்தால் அது தனக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்றும், தன்னை அடுத்து வரும் திருநங்கைகள் மேல் விழும் தவறான பார்வை வேறுபடும் என்றும் கூறினார்.

 

பெண்கள் மற்றும் திருநங்கைகள் தைரியமாக வெளியே பேச வேண்டும் என்றும், திருநங்கைகளுக்கு கல்வி முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் . அதனால் அவர்கள் தன் பிரச்சனையை தீர்த்து கொள்ள முடியும் என்றும், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், பாலியல் துன்புறுத்தல் இருந்தால் வெளிப்படையாக அதை கூறவேண்டும் என்று கூறினார்.

 

திருநங்கைகளை லயோலா கல்லூரிகளில் பெண்ணாக பார்ப்பதாகவும், அதனாலயே தான் இந்த நிலைக்கு வருவதாகவும் கூறினார். கல்லூரியில் உள்ள மொத்த வாக்குகள் 500. அதில் 328 வாக்குகள் நளினி பிரிசித்தா பெற்றுள்ளார்.


Leave a Reply