தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் தாக்கி இந்திய மதிப்பில் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் கொள்ளை!சூலூர் போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கலங்கல் சாலையில் உள்ள ஸ்கை அவென்யூவில் வசித்து வருபவர் உன்னிகிருஷ்ணன்.இவரது மகன் ரத்தீஷ் (34).இவர் கோவை மாநகரில் அமைந்துள்ள சாய்பாபா காலனியில் உள்ள தனியார் பண பரிவர்த்தனை நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ரித்தீஷ் தனது நிறுவனத்திற்கு சொந்தமான அமெரிக்க டாலர் 43 ஆயிரம்.

 

இந்திய மதிப்பீட்டில் சுமார் 30 லட்ச ரூபாய் மற்றும் ஒரு செல்போனுடன் கலங்கல் சாலையில் உள்ள தனது வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள அபிராமி கார்டன் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் தாங்கள் வைத்திருந்த சிறிய பட்டா கத்தியால் ரித்தீஸின் இடது கையில் தாக்கிவிட்டு இந்திய மதிப்பில் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் மற்றும் செல்போனை வழிப்பறி செய்துள்ளனர்.

 

இச்சம்பவம் குறித்து அறிந்த சூலூர் காவல் துறையின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம்பட்ட ரித்தீஸை மீட்டு சூலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இது சம்பந்தமாக சூலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியர் நாடகமாடுகிறாரா ?, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனரா ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த தனியார் நிறுவன ஊழியரை தாக்கி இந்திய மதிப்பில் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply