நகை வாங்குவது போல் நடித்து 20 சவரன் நகை கொள்ளை

Publish by: --- Photo :


சென்னை வண்ணாரப்பேட்டையில் நகை கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பி பெண்கள் இருவர் 20 சவரன் நகைகளை திருடும் காட்சிகள் சி‌சி‌டி‌வியில் பதிவாகியுள்ளது. வண்ணாரப்பேட்டையில் தருண் குமார் என்பவருக்கு சொந்தமான நகைக் கடை ஒன்று உள்ளது. நேற்று கடையில் தருண் குமார் மட்டுமே இருந்ததை அறிந்த 2 பெண்கள் நகை வாங்குவது போல் கடைக்குள் நுழைந்துள்ளனர். .

 

நகையை தேர்வு செய்வது போல் தருண் குமாரின் கவனத்தை ஒரு பெண் திசை திருப்பிய நிலையில் , மற்றொரு பெண் 20 சவரன் நகையை திருடினார். பின்னர் இருவரும் நகைக்கடையை விட்டு வெளியேறினர். வாடிக்கையாளர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் தருண் குமார் சி‌சி‌டி‌வி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் நகை திருடு போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரளித்த புகாரின் பேரில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Leave a Reply