ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நிதி நிறுவனம் நடத்தி 2 கோடி மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த முரளிக்குமார் மற்றும் வேல்பாண்டி என்ற இருவரும் கடந்த ஆண்டு ஜெயம் ஜூவெல்லர்ஸ் மற்றும் ஜெயம் நிதி நிறுவனம் ஆகியவற்றை தொடங்கினர்.
தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறைந்த விலையில் தங்கம்,குறைந்த வட்டிக்கு கடன் உள்ளிட்ட திட்டங்களை அவர்கள் அறிவித்தனர். இதனை நம்பி அந்தியூரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் 2 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்தனர்.
ஆனால் சில மாதங்களிலேயே அவர்கள் நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானபோது தான் ஏமாற்றத்தை உணர்ந்த மக்கள் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். இவர்கள் இருவரையும் தேடி வந்த போலீசார் முரளிக்குமாரை அந்தியூர் பேருந்து நிலையத்தில் மடக்கி பிடித்தனர். தலைமறைவாக உள்ள வேல்பாண்டியனை தேடி வருகின்றனர்.