மத்திய ரிசர்வ் வங்கி மீண்டும் 25 அடிப்படை புள்ளிகள் வட்டியை குறைக்கும் என்று டிவிட்ஸ்ரெட்டிங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் 3 முறை வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.கடந்த 6 ஆம் தேதி 6 சதவீதத்த்லிருந்து 5 முக்கால் சதவீதமாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டது.
எனினும் பொருளாதார வளர்ச்சி பலவீனமாக இருப்பதாலும், 3 சதவீதமாக குறைந்துள்ள பண வீக்கத்தை 4 சதவீதமாக வைத்திருக்கவும், மேலும் கால் சதவீதம் அளவிற்கு ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை குறைத்து 5 1/2 சதவீதமாக நிர்ணயிக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக டிவிட்ஸ்ரெட்டிங்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. விவாசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி உதவியால் பண வீக்கம் உயரும் என்றும், கிராமப்புறங்களில் வருவாய் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்ப்பதாக டிவிட்ஸ்ரெட்டிங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.